world

img

ரஷ்ய எல்லைக்குள் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி

வாஷிங்டன்,மே 31- அமெரிக்கா, தனது ஆயுதங்கள் மூலம் ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர சீனா தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த அழைப்பு விடுத்து வருகிறது. ரஷ்யாவும் அமைதியை விரும்புவதாகத் தெரிவித்து வருகிறது. எனினும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து  ஆயுத உதவிகளை செய்து போரை மேலும் நீட்டித்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் ஏவுகணைகளை பயன்படுத்தினாலோ அல்லது ரஷ்யா எல்லைக்குள் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் ஆயுதங்களை பயன்படுத்தினாலோ  கடுமையான விளைவுகளையே உக்ரைன் எதிர்கொள்ளும் என புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார். எனினும் உக்ரைன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி போரில் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்த தொடர்ந்து அனுமதி கேட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசு ரஷ்யாவின் சில பகுதிகளில் அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதித்துள்ளார்.

;