world

img

சிலி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக “கம்யூனிஸ்ட்” வரலாறு படைக்க வாய்ப்பு

சிலி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக “கம்யூனிஸ்ட்” வரலாறு படைக்க வாய்ப்பு

சான்டியாகோ, ஜூலை 2- சிலி ஜனாதிபதி தேர்தலில் இடது சாரிகள் கூட்டணி சார்பில் போட்டியிடு வதற்கான வேட்பாளரை தேர்ந்தெ டுக்கும் தேர்தலில் போட்டியிட்ட கம்யூ னிஸ்டான ஜீனெட் ஜாரா 60 சதவீத வாக்குகள் பெற்று பெரும் வெற்றி பெற்றுள்ளார்.  நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், “சிலிக்கான ஒற்றுமை” (Unidad para Chile) என்ற இடதுசாரி கூட்டணி கட்சியின் ஜனாதி பதி வேட்பாளராக ஜாரா களமிறங்க உள்ளார்.  எதிரணியில் சுதந்திர ஜனநாயக ஒன்றியம் என்ற வலதுசாரி கட்சியின் வேட்பாளர்  எவ்லின் மத்தே மற்றும் குடியரசுக்கட்சியின் ஜோஸ் அன்டோ னியோ காஸ்ட் ஆகிய இரண்டு வலது சாரி வேட்பாளர்கள் உள்ளனர்.  இந்த இருகட்சியும் இணைந்து ஒரு பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுத் தால் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால் அவர்கள் இணையாத சூழலில் வலதுசாரிகளின் வாக்குகள் பிரிந்து கம்யூனிஸ்ட் வேட்பாளராக உள்ள ஜாரா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.  இது போன்ற ஒரு சூழல் சிலி வர லாற்றில் நடந்ததே இல்லை என வர லாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்ற னர்.  2022 ஆம் ஆண்டு கேப்ரியல் போரிக் ஆட்சி அமைத்த போது, ஜாரா அவரது அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்புத்துறை அமைச்சராக அங்கம் வகித்தார். ஜனாதி பதி வேட்பாளராக போட்டியிடுவ தற்காக 2025 ஏப்ரல் மாதம்  இவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.  சால்வடோர் அலண்டேவின் அர சாங்கத்தை அமெரிக்காவின் வெளி யுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்சிங்கர் சூழ்ச்சியின்படி அந் நாட்டின் ராணுவ தளபதி அகஸ்டோ பினோசெட் கவிழ்த்த பிறகு, அந்நாட்டு அமைச்சரவையில் இடம் பெற்ற முதல் கம்யூனிஸ்ட்  ஜாரா மட்டுமே. அலண்டே அரசாங்கத்தில், ஒர்லாண்டோ மில் லாஸும், லூயிஸ் ஃபிகெரோவா மாசுலா ஆகிய இரண்டு இடதுசாரிக ளும் நிதி அமைச்சராகவும் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்புத்துறை  அமைச்சராகவும் பணியாற்றினர்.   ஜாரா அமைச்சராக இருந்த போது ஓய்வூதிய சீர்திருத்தம் செய்ய வேண்டிய பொறுப்பு அவரிடம் ஒப்ப டைக்கப்பட்டது. முழு அதிகாரம் இல்லாத போதிலும் அவருக்கு இருந்த  வாய்ப்புகளை பயன்படுத்தி சில நேரங்களில் சில கட்சிகளின் ஆதரவுடன் இவரது சாதுரியமான முயற்சியால் புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்தில் முதலா ளிகளின் பங்களிப்பு 7 சதவீதமாக அதிகரித்தது.  தேர்தலுக்கு முன்பாக ஊடகங்க ளால் மக்கள் மனதில் உருவாக்கப் பட்டுள்ள போலி பிம்பத்தையும் பொய்ப் பிரச்சாரத்தையும் எதிர்கொள்வதும், கம்யூனிஸ்ட் வெறுப்புப் பிரச்சாரம் திணிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் மக்கள் மனநிலையை மாற்றியமைக்க வேண்டும் என்ற  முதன்மை சவால் ஜாராவிற்கு உள்ளது என கூறப்படுகிறது.