what-they-told

img

மாற்றுத்திறனாளிகளுக்காக பேருந்துகளில் சிறப்பு வடிவமைப்பு

சென்னை,நவ.22- மாற்றுத்திறனாளிகள் தங்கள் சக்கர நாற்காலியுடன் ஏறி பயணம் செய்வதற்கு ஏதுவாக பேருந்துகள் வடிவமைக்கப்பட்டு வருவதாக தமிழக போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.  இதில் நிதி நிலையை மேம்படுத்துதல், பணியாளர்களின் பதவி உயர்வு, பணிமனை களின் தேவைகளை நிவர்த்தி செய்தல், புதிய அறிவிப்புகளை விரைந்து செயல்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பின்னர் பேசிய சந்திரமோகன், “கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத்து 442 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் நான்காயிரத்து 802 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. 321 பணி மனைகளின் தரம் மேம்படுத்தப்பட உள்ளது” என்றார்.

;