what-they-told

img

பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் வெறும் கண்துடைப்பே - விவசாயிகள் குமுறல்

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் அறி விக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஆண்டுக்கு மூன்று முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியு தவி வழங்கப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசா யிகள் இந்நிதியுதவி பெற தகுதி யுள்ளவர்கள். இதையடுத்து இத் திட்டத்திற்கு தகுதியான விவ சாயிகளிடம் இருந்து விண்ணப்பம் பெறும் பணிகள் நடந்து வருகிறது. இதன்பின் விவசாயிகளிடம் இருந்த பெறப்பட்ட விண்ணப் பத்தை பரிசீலிக்கும் பணியில் வருவாய்த்துறை, தோட்டக்கலை மற்றும்  வேளாண் துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்ற னர்.  

மேலும், இத்திட்டம் தொடர் பான கணக்கெடுப்புப்பணி, அனைத்து வருவாய் கிராமங்களி லும் நடந்து வருகிறது.  தமிழகம் முழுவதும் குறைந்தது 70 லட்சம் விவசாயிகளை இத்திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவோருக்கான தகுதிகள் கடுமையாக இருப்பதால் பெரும் பாலான விவசாயிகளால் அரசின் நிதியுதவியை பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து அவிநாசி பகுதி வருவாய்த்துறை அலுவலர்கள் கூறியதாவது; கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளில் பலர் கல் வியறிவு இல்லாதவர்கள். விவசா யம் தவிர பிற விவரங்கள் அவர் களுக்கு குறைவாகவே உள்ளது. ஆனால், அவர்களது பிள்ளைகள், பட்டப்படிப்பு படித்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரு கின்றனர். பலர் சொந்த தொழில் செய்து வருகின்றனர்.  இதற்காகத் தங்களது பெற்றோர் பெயரில் உள்ள நில ஆவணத்தை வங்கியில் அடமானம் வைக்கின்றனர். தங் களது தொழிலில், தங்களது தந்தையை, பங்குதாரராகவும் சேர்த்துக் கொள்கின்றனர். இத னால், அவர்கள் பிரதமரின் உதவித்தொகை பெறும் திட்டத்தில் தகுதியில்லாதவர்களாக கருதப் படுகின்றனர்.

மேலும் சிறு, குறு விவசாயிகள் பலர் தங்களது நிலத்தை அட மானம் வைத்து வீட்டுக்கடன் வாங்கியுள்ளனர். அதேசமயம், வீட்டுக்கடன்  பெற வருமான வரி  விபரம் சமர்பிக்க வேண்டும் என்ற  நிலையில், அவர்களுக்கும் உதவித் தொகை கிடைக்காது. எங்களின் கணக்கெடுப்பின் போது, பெரும் பாலான விவசாய  குடும்பங்களில் இத்தகைய நிலையை காண முடிகிறது. இதனால் பெரும் பாலான விவசாயிகளை இத் திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என அரசு இலக்கு நிர் ணயித்தாலும் அதற்கான வாய்ப் பில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து விவசாயிகள் கூறு கையில், மத்திய அரசு ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச்சாலை, உயர் மின் கோபுரம் போன்ற திட்டங் களை தமிழக விவசாயிகள் மத்தி யில் திணித்து வருகிறது. இந்த 6 ஆயிரம் ரூபாய் திட்டம் என்பது கண் துடைப்பிற்காக செய்யப்படும் வெற்று அறிவிப்பே ஆகும் என ஆவேசமாக தெரிவித்தனர்.

- அருண், அவிநாசி.