what-they-told

img

மின்னல் வேக ரயில் பாதை

பெய்ஜிங் வடக்கு ரயில் நிலையத்திலிருந்து ஜாங்ஜியாகோ (சில போட்டிகள் இந்த நகரில் நடைபெறுகிறது) செல்ல 2.10 மணிநேரமாகும். புதிய தொழிநுட்பத்துடன் ரயில் மற்றும் தண்டவாளங்கள் சீரமைப்பு செய்துள்ள நிலையில், பயண நேரம் 1:20 மணிநேரமாக குறையும். குறிப்பாக இந்த வழித்தடத்தில் செல்ல 350 கிமீ வேகத்தில் ரயில் இயக்கலாம். 

புதிய விமானநிலையம் 

ஒலிம்பிக் தொடருக்காக பெய்ஜிங் டாக்சிங் என்ற சர்வதேச விமான நிலையத்தை மின்னல் வேகத்தில் கட்டியுள்ளது சீன அரசு. இந்த புதிய விமான நிலையத்தால் பெய்ஜிங் சர்வதேச நிலையத்திற்கு சென்று வீரர்கள் மற்றும் அதிகாரிகள் காத்திருக்க தேவையில்லை. நேரடியாக சர்வதேச விமானங்கள் தரையிறங்கும்.

எக்ஸ்பிரஸ் வே 

மேலும் சில சாலைபோக்குவரத்தில் எக்ஸ்பிரஸ் வே (அதிவேக சாலைகள்) அமைக்கப்பட்டுள்ளன.

10 நாடுகள் புறக்கணிப்பு 

குளிர்கால ஒலிம்பிக் தொடரில் சீனா மனித உரிமையை நிலைநாட்டவில்லை எனக்கூறி ராஜதந்திர நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா,  எஸ்டோனி யா, கொசோவோ, லிதுனியா, சீன தைபே ஆகிய 10 நாடுகள் தொடரை புறக்கணித்துள்ளன. கொரோனா தொற்று காரணமாக இந்தியா, ஆஸ்திரியா, நியூசிலாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து, ஸ்லோவேனியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் அதிகாரிகளை அனுப்பவில்லை. 

நடைபெறும் நாட்கள்
17 நாட்கள் (பிப்.4 முதல் 20 வரை)
தொடக்க விழா 
தொடக்க விழா, இறுதி நிகழ்வுகள் பெய்ஜிங் தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது (பறவைக்கூடு மைதானம்)
செலவு
309 கோடி ரூபாய் (3.9 பில்லியன் டாலர்)
மைதானங்கள்
14 (பெய்ஜிங்-8, யாங்கிங்-3, ஜாங்ஜியாகோ-3)