what-they-told

விஞ்ஞானியும் எட்டுக்கால் பூச்சியும்

ஒரு முறை ஒரு விஞ்ஞானி தன் உதவியாளருடன் இணைந்து,எட்டு கால் பூச்சியை ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். எட்டுகால் பூச்சியை பிடித்து வந்து தன் ஆராய்ச்சி மேஜையில்வைத்து, தன் உதவியாளரிடம் விவரித்தார்: “இந்த பூச்சிக்குஅந்த காலத்திலேயே எட்டு கால்கள் பிளாஸ்டிக் சர்ஜெரிமுலம் பொருத்தப்பட்டது. வலை பின்ன நமது முன்னோர்கள் ராக்கெட்டில் ஏறி பல கிரகங்களுக்கு போய் ஆராய்ச்சி செய்துகற்றுக் கொடுத்தனர். உதவியாளரோ வேறு சிந்தனையில் இருந்தார்: “தண்ணீர்ஆவி ஆவதை தடுக்க தெர்மோகோல் ஆராய்ச்சிபோல்,சுட்டெரிக்கும் சூரியனை மறைக்க தெர்மோக்கோலை எப்படிபயன்படுத்துவதும் என்று.”விஞ்ஞானி எட்டுகால் பூச்சிக்கு மேஜையின் மேலிருந்து கீழே குதிக்க பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார். உதவியாளரை அழைத்து குறிப்பு எடுக்க உத்தரவிட்டார்.“எட்டுகால் பூச்சி எட்டுகாலுடன் மேஜையிலிருந்து சிறப்பாககுதித்தது.”


பின்னர் அந்த விஞ்ஞானியின் குரூர குணம் வெளிப்பட்டது. இப்போது அவர் பூச்சியின் ஒரு காலை உடைத்து குதிக்க கட்டளையிட்டார். வேதனையுடன் அந்த பூச்சியும்குதித்தது. குறிப்பு எடுக்கப்பட்டது: “ஏழு காலிலும் அதே உற்சாகத்தோடு குதித்தது.” இதே போல் ஒவ்வொன்றாக கால்கள் உடைக்கபட்டு அந்த பூச்சி ரண வேதனையில் வாடிய போதும் ஆராய்ச்சிக்காக பயன்படுகிறோம் என்று நம்பி தப்பிக்கவழியில்லாமல் திணறியது. கடைசியாக எட்டாவது காலைஉடைத்துவிட்டு, “விஞ்ஞானி” அந்த பூச்சியை மேஜையிலிருந்து குதிக்க சொன்னார். அந்த பூச்சி அசைவில்லாமல் கிடந்தது. “விஞ்ஞானி” ஆராய்ச்சியின் முடிவை உலகிற்குஇவ்வாறு அறிவித்தான்... எட்டுகால் பூச்சிக்கு எட்டுகால்களையும் உடைத்த பிறகு “காது கேட்காமல் போய்விட்டது.”இப்படித்தான் நம்மையாளும் மோடி அரசு, அரசியல் சாசனத்தின் அடிப்படை மாண்புகளை உடைத்தெறிந்து இந்திய திருநாட்டின் அடிப்படையான இறையாண்மை, சுயசார்பு, ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மை, மக்கள்ஒற்றுமை, அமைதி ஆகியவற்றை சீரழிக்க முற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசை இதற்கு மேலும் நீடிக்கவிட்டால் அடுத்த ஆராய்ச்சி பொருளாக நாம் ஆக்கப்படுவோம். உஷார்உஷார்...


ராம்குமார், திண்டுக்கல்



;