what-they-told

img

வாடகைதாரர்கள் ஒப்பந்தம் 365 நாளாக உயர்வு

சென்னை, ஜன. 9- சொத்து உரிமையாளர் கள் மற்றும் வாடகைதாரர்க ளிடையே ஒப்பந்தம் மேற் கொள்ளும் அவகாசத்தை 365 நாட்களாக உயர்த்த வழி வகுக்கும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டப்பேர வையில் நிறைவேற்றப் பட்டது. சொத்து உரிமையாளர் கள் மற்றும் வாடகைதாரர் களிடையே ஒப்பந்தம் ஏற்ப டுத்த கால அவகாசம் வழங் கும் சட்டமானது 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 90  நாட்கள் கால அவகாசம்  வழங்கப்பட்டது. பிறகு அது  210 நாட்களாக உயர்த்தப் பட்டது. தற்போது அந்த  அவகாசத்தை 365 நாள்க ளாக உயர்த்த வழிவகுக்கும் சட்டத்திருத்த மசோதாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த தமிழ்நாடு டாக்டர்  அம்பேத்கர் சட்டப்பல் கலைக் கழக திருத்த அவசர  சட்டத்தில், அப் பல்கலைக் கழக பதிவாளர் தகுதியை திருத்தம் செய்வதற்கு பொறுப்பு பதிவாளர் கோரி யதை கவனமுடன் பரி சீலனை செய்து தகுதியினை மாற்றியமைக்க 1996 ஆம் ஆண்டின் சட்டத்தை தக்க வாறு திருத்தம் செய்ய முடிவு  செய்துள்ளது” என்றார்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழக பெயரை  தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெய லலிதா மீன்வளப் பல்கலைக் கழகம் என மாற்றம் செய் யப்பட்டுள்ளது. இந்த பல்  கலைக் கழகத்தின் நிதி  பயன்பாட்டை கண்காணிக்க வும், ஆய்வு, விசாரணை மீதான அதிகாரத்தை அரசி டம் வழங்கவும் முடிவு செய் யப்பட்டுள்ளது. துணை வேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில் அரசு பிரதிநிதி ஒரு வரைச் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதற்காக 2012 ஆம் ஆண்டு சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்த மசோதாவில் தெரி வித்திருந்தார். 2020 ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறி வியல் பல்கலைக் கழகம் திருத்தம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி திருத்  தம், 2020 ஆண்டு தமிழ்நாடு  இசை மற்றும் கவின் கலை  பல்கலைக் கழகம் மற்றும்  தனியார் கல்லூரிகள் ஒழுங்கு முறைப் படுத்துதல், 2020 ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப் படுத்துதல் உள்ளிட்ட 15  மசோதாக்கள் குரல் வாக்  கெடுப்பு மூலம் நிறைவேற்றப்  பட்டது.

;