what-they-told

img

நீட் தேர்வு: மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது

சென்னை,ஜன.23- நீட் தேர்வுக்கு தமிழகத்தி லிருந்து விண்ணப்பித்த மாண வர்களின் எண்ணிக்கை நடப்பு கல்வியாண்டில் 17 சதவீதம் சரிந்துள்ளதாக தேசிய தேர்வு முகமையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த கல்வியாண்டில், தமிழ கத்திலிருந்து 1 லட்சத்து 40 ஆயிரம்  பேர் நீட் தேர்வுக்கு விண்ணப் பித்து 1.23 லட்சம் பேர் தேர்வு எழுதி அதில் 48.57 சதவீதம் பேர்  தேர்ச்சியடைந்தனர். இந்நிலையில், நடப்பு கல்வி யாண்டில் தமிழகத்திலிருந்து நீட்  தேர்வு எழுத 1 லட்சத்து 17 ஆயி ரம் பேர் மட்டுமே விண்ணப்பித் துள்ளனர். இது, கடந்த ஆண்டை  விட 17 சதவீதம் குறைவு என  தேசிய தேர்வு முகமை தெரி வித்துள்ளது.

கட் - ஆஃப் மதிப்பெண் குறை தல், நீட் தேர்வில் பழைய மாண வர்கள் அதிக இடங்களைப் பிடித்  தல், மாற்றப்பட்ட புதிய பாடத்  திட்டம் உள்ளிட்டவை காரண மாக நடப்பு ஆண்டில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாண வர்களின் எண்ணிக்கை குறைந் துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் தமிழ கத்தில் இருந்து நீட் தேர்வு எழுதி  மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த  4,202 பேரில் 2,916 பேர் பழைய  மாணவர்கள் என்ற விவரத்தை  கல்வியாளர்கள் சுட்டிக்காட்டு கின்றனர். 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் காரணமாக, இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் ஓராண்டு  காலம் முறையாக நீட் தேர்வுக்கு  பயிற்சி பெற்று அடுத்த கல்வி யாண்டில் நீட் தேர்வை எழுத  வாய்ப்பு அதிகம் உள்ளதாக  கல்வியாளர்கள் தெரிவிக்கின்ற னர். இதனிடையே, இந்த விவகா ரம் குறித்த கேள்விக்கு பதில ளித்த அமைச்சர் ஜெயக்குமார், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்றார்.

;