what-they-told

img

மார்க்சிஸ்ட் கட்சி பொங்கல் வாழ்த்து

‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’            

மார்க்சிஸ்ட் கட்சி பொங்கல் வாழ்த்து

சென்னை, ஜன. 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி வருமாறு:  தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இனிய பொங்கல்  நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தைப்பொங்கல் சாதி, மதம் கடந்த திருநாள். இயற்கையையும், உழைப்பையும் போற்று கிற உழவர்களின் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வரு கிறது. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற பண்பாட்டு அடிப் படையில் பொங்கல் விழா கொண்டாடும் இத்தருணத்தில், மத அடிப்படையில் மக்களை கூறுபோடும் அடாவடி நடவடிக்கை களை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. குடிகெடுக் கும் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இன் னொரு பக்கம் மக்கள் தொகை பதிவேடு என்ற பெயரில் ஒவ்வொரு குடிமகனின் குடியுரிமை கேள்விக்கு உள்ளாக்கப்படவுள்ளது. இக்கணக்கெடுப்பின் போது ஒவ்வொருவரும் தான் குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டுமாம். தவறும் பட்சத்தில் அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட வாய்ப்புள்ளது. 

மத்திய, மாநில ஆட்சியாளர்களின் தவறான கொள்கை களால் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது. உழவர் பெருமக்கள் வாழ்வு சிதைந்து கொண்டுள்ளது. கார்ப்பரேட்மயக் கொள்கைகளால் விவசாயம் சீரழிக்கப்பட்டு, விவசாயிகள் வாழ்வு இருளில் மூழ்கியுள்ளது. வறுமையும், வேலையின்மையும் நாட்டை உலுக்கிக் கொண்டுள்ளது. மத்திய அரசின் நிதிநிலை திவாலாகி கொண்டுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகளை சீர் செய்ய வக்கற்ற மோடி அரசு, மக்களை பிளவுபடுத்தும் சதி நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. இதை முறியடிக்க இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக போராடுவது அவசியமாகும். ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை உருவாக உழைத்திடுவோம்’ என்ற உறுதியோடு அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

;