what-they-told

img

சீட்டு, தாயம் விளையாடிய 40 பேருக்கு கொரோனா

ஊரடங்கு சமயத்தில் வீட்டில் முடங்கி யுள்ள மக்களில் சிலர், பொழுதுபோக்க ஏதா வது செய்து வருகின்றனர். பலர் சமூக இடை வெளியை பின்பற்றாமல் நண்பர்களுடன் விளையாடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பொழுதுப் போக் கிற்காக நண்பர்களுடன் சீட்டு மற்றும் தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா பரவி யது. இது தொடர்பாக கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் இம்தியாஸ் வெளியிட்ட வீடியோ வில் கூறியுள்ளதாவது:

கிருஷ்ணா லங்காவில் டிரக் ஓட்டுநர் ஒரு வர் பொழுது போக்கிற்காக நண்பர்களுடன் சீட்டு விளையாடியுள்ளார். அதன் அருகே பெண்களும் குழுவாக தாயம் விளையாடி யுள்ளனர். அந்த ஓட்டுநர் மூலமாக அங்கி ருந்த 24 பேருக்கும் கொரோனா பரவி யுள்ளது.  அதேபோல், கர்மிகா நகரில் சீட்டு விளை யாடிய டிரக் ஓட்டுநர் மூலமாக 15 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் நகரில் சுமார் 40 பேர் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக இடை வெளியை பின்பற்றத் தவறியதே இதற்குக் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.