what-they-told

img

திருவனந்தபுரம் உயிர் அறிவியல் பூங்காவில் வைராலஜி ஆய்வக கட்டிட பணிகள் நிறைவு

திருவனந்தபுரம், செப்.24- கேரளத்தின் முதல் ஒருங்கிணைந்த உயிர் அறிவியல் பூங்காவான ‘பயோ 360’ இல் வைராலஜி ஆய்வக கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த ஆய்வகங்களில் குரங்கு அம்மை நோய் உட்பட சுமார் எண்பது வகையான வைரஸ் மூலக்கூறுகளை கண்டறியும் வசதி கள் உள்ளன. பூங்காவின் முதல் கட்டமாக 80,000 சதுர அடி கட்டிட வளாகத்தை கேஎஸ்ஐ டிசி அமைத்துள்ளது. இது விரைவில் மேம் பட்ட வைராலஜி நிறுவனத்திடம் (ஐஏவி) ஒப்படைக்கப்பட உள்ளது. ஐஏவி பிஎஸ்எல் 3 ஆய்வகங்களுடன் மற்றொரு பிரிவின் கட்டுமானத்தையும் தொடங்கியுள்ளது. இந்த ஆய்வகங்களில் கோவிட் மற்றும் ரேபிஸ் பரிசோதனை செய்ய  மேம்பட்ட வசதிகள் இருக்கும். இந்த வளாகத்தில் 16 உயிர் பாதுகாப்பு-2 வகை ஆய்வ கங்களை அமைக்க ஐஏவி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவை உட்பட 22 ஆய்வகங்கள் 18 மாதங்களில் முழுமையாக அமைக்கப்படும். இந்த ஆய்வகங்கள் மருத்துவ வைராலஜி, வைரஸ் நோய் கண்டறிதல், வைரஸ் தடுப்பு மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சி, வைரஸ் பயன்பாடுகள், வைரஸ் தொற்றுநோயியல், வைரஸ் மரபணுவியல், அடிப்படை மற்றும் பொது வைராலஜி ஆகிய துறைகளில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;