what-they-told

img

மறு உத்தரவு வரும் வரை பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை

கொடைக்கானல்,அக்.3- காலாண்டுத் தேர்வு மற்றும் ஆயுதபூஜை  தொடர் விடுமுறையால் கொடைக்கான லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித் துள்ளது. இதனால் கொடைக்கானல் பிரதான  சாலைகளாக உள்ள அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், வத்தலகுண்டு பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் வாகனங்கள் செல்ல முடியாமல் பல கி.மீ தூரம் வரை போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் பெறும் அவதி அடைந்தனர். மேலும் போக்குவரத்து காவலர்கள் போதிய அளவில் இல்லாமல் இருப்பதால் போக்கு வரத்தை சரி செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணி கள் தற்போது மன்னவனூர் மற்றும் சூழல் சுற்றுலா மையம் பகுதிகளை அதிகம் விரும்பி  அங்கு சென்று வருகின்றனர். இதனால் கொடைக்கானல் நகர் பகுதியை காட்டி லும் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்  பட்டுள்ள ஜிப் ரோப்பிங் விளை யாட்டிலும் செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பேத்துப்பாறை பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை(அக்.2) இரவு முதல் குட்டிகளுடன் யானை ஒன்று முகாமிட்டு அதே பகுதியில் சுற்றி வருகிறது. இதனை யடுத்து பேரிஜம் ஏரிக்கு செல்ல இன்று காலை  முதல் வனத்துறை தடை விதித்துள்ளது. மறு  உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும்  என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுலா  பயணிகளின் பாதுகாப்பை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள்  தெரிவித்தனர். இதனால் பேரிஜம் ஏரிக்கு  செல்ல டிக்கெட் எடுத்த சுற்றுலா பயணிகள்  ஏமாற்றமடைந்தனர்.

;