what-they-told

img

கண்ணீர் வர வைக்கும் வெங்காய விலை

சென்னை, நவ. 26- வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. பெரிய வெங்காயம் எனப்படும் பல்லாரியும், சின்ன வெங்காயம் எனப்ப டும் சாம்பார் வெங்காயமும் ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் விலை உச்சநிலையில் உள்ளது.

கர்நாடகா, மகாராஷ்டி ரத்தில் பெய்த கன மழை கார ணமாக வெங்காய விளைச்  சல் கடுமையாக பாதிக்கப் பட்டது. விளைச்சலின் போதே அழுகியதால் வெங்  காயத்தின் வரத்து குறைந் தது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் பல்லாரி வெங்காயம் (பெரியது) கிலோ ரூ.90க்கும், சிறிய  ரகம் ரூ.80 க்கும் விற்கப் பட்டது. இதேபோல் சாம்பார்  வெங்காயம் கிலோ ரூ.160 க்கு விற்கப்படுகிறது. காய் கறி கடைகள், மளிகை கடை களில் வெங்காயம் சில்லறை  விற்பனையில் அதைவிட கூடுதலாக விற்கப்படுவது வழக்கம்.

சாம்பார் வெங்காயம் ரூ.180 முதல் ரூ.200 வரையி லும் பல்லாரி ரூ.100 முதல்  ரூ.120 வரை என விற்கப்படு கிறது. பெரும்பாலான காய் கறி கடைகளில் சாம்பார் வெங்காயம் விற்பதே இல்லை. பொதுமக்கள் விலையேற்றத்தால் பல்லாரி வெங்காயத்தைதான் அதி கம் பயன்படுத்துகிறார்கள்.