what-they-told

img

சந்தேகம் சாமிக்கண்ணு

வெளிநாட்டு நடைமுறைகளை பின்பற்றினால் விபத்துக்களை குறைக்கலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி 
ச.சா: சமீப காலமாக எப்போதுமே இவருக்கு வெளிநாட்டு சிந்தனை தான்
l l l
மரம் வளர்ப்பின் மூலமே மழைநீரை பாதுகாக்க முடியும் : ஜக்கி வாசுதேவ் 
ச.சா: காட்டை அழித்து சிறை வைத்தால் மழை பொழியுமா? 
l l l
வெள்ளையறிக்கை கேட்டால் வெள்ளரிக்காய் தருவோம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 
ச.சா: அப்படியென்றால் கருப்பறிக்கை கேட்டால் கருவேப்பிலை தருவீர்களா? 
l l l
புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் ஐன்ஸ்டீன் : மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் 
ச.சா: இவர்களையெல்லாம் எங்கிருந்துதான் பாஜக கண்டுபிடித்ததோ?