what-they-told

img

work from home – புதிய பணிச்சூழல் எப்படி?

கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சானிடைசர் உபயோகித்தல் ஆகியன கொரோனா பேரிடர் முடி வுற்ற பிறகும் நம் வழக்கமான பணி களில் ஒன்றாக மாறிப்போகும் என ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்ற னர். அதேபோல், தினசரி வேலைக் குச் செல்வோருக்கும் ஒரு மாற்று வழியை இக்கொரோனா காலம் நமக்கு வெளிகாட்டியுள்ளது. அது, work from home என்ற வீட்டிலி ருந்து பணி செய்வதே ஆகும். கொரோ னாவால் லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து இருக்கக் கூடிய இதே நேரத்தில்தான், வீட்டிலிருந்து வேலை என்னும் வழக்கம் தற் போது உலக கலாச்சாரமாக மாறி வருகிறது. இத்தகைய புதிய பணிச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள ஐடி துறை யைச் சேர்ந்த சிலரிடம் பேசுகையில்,

வீடும், அலுவலகமும் ஒன்றல்ல…
ஐடி துறையில் தரப் பகுப்பாய்வு தளத்தில் 2 வருடங்களாக பணிபுரி யும் நிவேதிதா என்பவர் கூறுகையில், அலுவலகமும், வீடும் எப்போதும் ஒன்றாக முடியாது. அலுவலகத்தைப் பொறுத்தவரை 10 மணி நேர வேலை என்றாலும், உணவு மற்றும் தேநீர் இடைவேளை என சிறிது நேரம் ஓய்வு கிடைக்கும். ஆனால், தற்போது வழக் கத்திற்கு மாறாக 12 மணிநேரம் வரை வேலை செய்ய வேண்டியுள்ளது. எப் போது வேலை இருக்கும் என தெரியா ததால் எந்நேரமும் கணினி முன்னே இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. மேலும், பணியில் ஏதேனும் சந்தேக மெனில் அலுவலகத்தில் அருகிலி ருப்பவரிடம் கேட்டுக் கொள்வோம். வீட்டிலிருப்பதால் அலைபேசியில் கேட்டுக் கேட்டு செய்ய சற்று சிரம மாக உள்ளது.  நான் பரவாயில்லை, ஆனால் திரு மணம் முடிந்து பணிபுரியும் பெண்க ளின் பாடு இக்காலங்களில் சற்று அதி கரித்துள்ளது. வீட்டு வேலையும் செய்ய வேண்டும், அலுவலகப் பணி யும் செய்ய வேண்டும் என்னும் பட்சத் தில் சற்று திக்குமுக்காடிப் போகிறார் கள். பொதுவாக வீடு என்பது அலுவ லகப் பணி செய்வதற்கான இட மல்ல. அலுவலகத்திற்கான சூழலை போல், எப்போதும் வீட்டினால் பணி புரிவதற்கான மனநிலையை வழங்க முடியாது. வேலையிழப்பைப் பொறுத் தவரை அரசின் கடுமையான தலை யீட்டால் மட்டுமே அதனை தடுத்தி நிறுத்திட முடியும். தற்போது எங்கள் கோரிக்கையாக நாங்கள் முன்வைப் பது அலுவலகத்தில் வேலை நேரம் நிர்ணயிக்கப்படுவது போல், வீட்டி னுள் இருந்து வேலை செய்யப்படும் போதும் அது கடைபிடிக்கப்பட வே டும் என்பதே. அதற்கு மேல் செய்யப் படும் வேலைக்கு தனிச்சம்பளம் வழங் கலாம் என்கிறார்.

இரட்டிப்பாகும் பணி…
தனியார் ஐடி நிறுவனத்தில் பணி புரியும் கார்த்திகா என்பவர் கூறுகை யில், ஐடி துறையில் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை சரியாக இருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு இது பெரும் சிரமமாகவே இருக்கும். அதாவது 8 மணி நேர வேலையை மட்டும் செய்பவர்களுக்கு இம்முறை சரி. ஆனால் என்னைப் போன்ற பணி யாளர்களுக்கு இது கடைபிடிக்கப்ப டாததால் எந்நேரமும் கவனத்துட னேயே இருக்க வேண்டும். இதனால் வீட்டிலிருந்து வேலை செய்வது சற்று  கடினமாக உள்ளது. ஏனெனில் அலு வலகத்திற்கு சென்றால் சற்று நடப் போம், பலரோடு பேசுவோம். அத னால் சற்று பணிச்சுமையும் குறையும். ஆனால், தற்போது வீட்டிலேயே ஒரே இடத்தில் இருந்து பணிபுரிவதால் கடி னமாக இருப்பதோடு முதுகுவலியும் சேர்ந்து கொள்கிறது.  மேலும், இணைய செயல்பாட் டைப் பொறுத்தவரை நாங்களே தான் அதற்கு செலவு செய்ய வேண்டியுள் ளது. அத்தோடு இணைய வேகமும் குறைவாக இருப்பதால் ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை இரு மடங்காக செய்ய வேண்டியுள்ளது. மேலும் மாதத்திற்கு ஒருமுறை ஏற்படும் மின்தடை அன்றும் விடுப்பு எடுக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இவ்வளவு இடர்பாடுகளுக்குள் பணிபுரிவது சற்று சிரமாக இருந்தாலும் வேறு வழி யில்லாமல் செய்து வருகிறோம் என் கிறார்.

தலைவலியாகும் மின்வெட்டும், இணைய சேவையும்
3 வருடங்களாக ஐடி துறையில் பணிபுரிந்து வரும் கோகிலா என்பவர் கூறுகையில், என் அலுவலகம் பெங்களூருவில் இருந்ததால் அங்கு பணிபுரிந்து வந்தேன். தற்போது ஊரடங்கினால் சொந்த ஊரான கோவையில் இருந்து பணியாற்றி வருகிறேன். ஆனால், நான் தங்கியி ருப்பது கோவை நகரப் பகுதியிலி ருந்து சற்று தூரம் தள்ளி உள்ள ஒரு கிராமமாகும். இங்கு அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் வேலையை குறித்த நேரத்திற்கு முடிக்க முடிவ தில்லை. மழை வந்தால் மின் தடை பட்டு விடும். இணையம் வேகமாகக் கிடைக்காவிட்டால் கூட பரவா யில்லை. சரியாகக்கூட கிடைக்காது. இதனால் என்னைப் போன்றோருக்கு  வீட்டில் பணிபுரிவது என்பது நிச்சயம் கடினமானது தான். அரசு தானாக முன் வந்து மின்தடையை சரிசெய்ய வேண் டுமேன எதிர்பார்க்கிறேன். மேலும் வீட்டிலிருந்து வேலை செய்யக் கூறும் நிறுவனங்கள் தன் ஊழியர்க ளுக்கு வேகமான இணைய சேவையை உறுதிப்படுத்த வேண் டும், இவ்வாறு அவர் கூறினார்.

விடுமுறையே இல்லை…
வெளிநாடுகளுக்குத் தேவை யான விளம்பரங்களைச் செய்ய ஐடி தரப் பகுப்பாய்வுத் துறையில் பணிபு ரியும் பவித்ரா என்பவர் கூறுகை யில், கடந்த மூன்று மாதங்களாக வீட்டி லிருந்து பணிபுரிந்து வருகிறேன். அமெரிக்காவின் ப்ளோரிடா மாகா ணத்தைத் தான் எங்கள் பணி அதி கம் சார்ந்துள்ளது. அங்கு கொரோனா தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் இங்கு நாங்கள் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளோம். இதனால் 70 பேர் வரை உள்ள என் அலுவலகத்தில் தற்போது 35-40 பேர் வரை போதும் என நிறுவ னத்தால் அறிவுறுத்தப்பட்டு வருகி றது. இது உண்மையில் கடைபிடிக் கப்பட்டால் பெரும் சிரமத்திற்கு உள் ளாவோம். இது ஒருபுறம் இருக்கை யில் வீட்டிலிருந்து நாங்கள் பணிபுரிவ தால் அதிக மின் பயன்பாடு தேவைப் படுகிறது. மேலும் இணையமும் அதி கமாக உபயோகக்கப்படுவதால் செலவும் அதிகமாகிறது. மேலும் வீட்டிலிருப்பதால் ஞாயிற்றுக்கிழமை யும் சில மணி நேரம் பணிபுரிய வேண்டி யதாகியுள்ளது. அதோடு அலுவல கத்தில் வேலை செய்யும் நேரத்தை விட தற்போது வீட்டில் அதிக நேரம் வேலை வாங்கப்படுகிறோம், இவ் வாறு அவர் கூறுகிறார்.

சூனியமாகும் எதிர்காலம் 
ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வெப் டிசைனராக பணிபுரியும் மனோஜ் என்பவர் குறிப்பிடுகையில், ஒரு வருடமாக இப்பணியில் இருக் கும் நான் கடந்த மூன்று மாதங்களாக வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகி றேன். ஆரம்பத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது ஜாலியாகத் தான் இருந்தது. வழக்கமாக அலுவல கத்தில் 8 மணிநேரம் பணிபுரிவேன். ஆனால், தற்போது வீட்டில் 10 மணி நேரம் வரை பணிபுரிய வேண்டி யுள்ளது. இதனால் சற்று சிரமமாக உள்ளது. இதற்கு எதுவும் தனியாக சம்பளம் தருவதில்லை. மாறாக, இவ்வருட சம்பள உயர்வை தற்காலிக மாக நிறுத்தி வைத்துள்ளனர்.  மேலும், வீட்டிலிருந்தாலும் வேலையில் தான் இருக்கிறோம் என்பதை வீட்டில் இருப்பவர்கள் மறந்து விடுவதால் வீட்டு வேலை யையும் சேர்த்து செய்ய வேண்டி யுள்ளது. எங்கள் அலுவலகத்தில் இதுவரை யாருக்கும் வேலையிழப்பு ஏற்படவில்லை. ஆனால், மற்ற பல நிறுவனங்களில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது அதி கரித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஓரிரு மாதங்களுக்கு சம்பளம் கொடுப் பதற்கு நிறுவனங்கள் சலிப்புற்று ஊழியர்களை வேலை விட்டு நிறுத் துவது, அவர்களின் அனுபவத்தை கேள்விக்குறியாக்குவதோடு எதிர் காலத்தையும் பாதிப்படைய வைக் கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

-ச.காவியா