சென்னை, ஏப் .19- கொரோனா பரிசோதனை யில் ரேபிட் டெஸ்ட் கருவியின் முக்கியத்துவம் என்ன? ரேபிட் டெஸ்ட் கருவி எவ்வாறு செயல்ப டுகிறது? என்பது குறித்து சுகா தாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம் அளித்திருக்கி றார். கருவுற்று இருக்கிறார்களா? என்பதை கண்டறிய பெண்க ளுக்கு உதவும் கருவியைப் போல் இருக்கும் பொருள்தான், ரேபிட் டெஸ்ட் கருவி. விரல் நுனியில் இருந்து எடுக்கப்படும் ஒரு சொட்டு ரத்தத்தை வைத்து ஒரு வருக்கு கொரோனா வைரஸ் உள் ளதா? இல்லையா? என்பதற்கான அறிகுறியை கண்டறியலாம்.
ஒருவர் உடலில் கொரோனா வைரஸ் நுழைந்தால், அதனை எதிர்த்து போரிட ரத்தத்தில் ஆண்டிபாடி எனும் பிறபொரு ளெதிரி உருவாகும். அவ்வாறு பிறபொருளெதிரி உருவாகி யுள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிவதற்கே ரேபிட் டெஸ்ட் கருவி பயன்படுத்தப்படுகிறது. அதாவது, கொரோனாவுக்கு எதிராக நமது ரத்தத்தில் பிறபொரு ளெதிரி உருவாகி இருந்தால், அந்த கருவியில் 2 சிவப்பு நிறக் கோடுகள் காட்டும். அது பாஸிட் டிவ். அப்படியானால் நமக்கு கொரோனா இருப்பதாக அர்த்தம் இல்லை. ஆனால், அதற்கான வாய்ப்பு உள்ளதாக அர்த்தம்.
அதேசமயம் ரத்தத்தில் கொரோனாவுக்கு எதிராக பிற பொருளெதிரி இல்லாவிட்டால், ரேபிஸ் டெஸ்ட் கருவியில் ஒரே யொரு சிவப்பு நிறக் கோடு மட்டுமே காட்டும். அது நெகட்டிவ். அப்படியானால் கொரோனா வுக்கான அறிகுறி இல்லை என நிம்மதியடையலாம். ஹாட் ஸ்பாட் பகுதிகளில் இந்த ரேபிட் கிட்ஸ் பெரும் உதவி யாக இருக்கும். இந்த கருவி முதல் நிலை சோதனைக்கு மட்டுமே. மேலும் அடுத்தகட்ட சோதனை களுக்கு நாம் ரியல் டைம் பிசிஆர் பரிசோதனைகள் செய்யப் படும்.