தாய் மொழி மீது
பேரன்பு கொண்ட
எங்கள் தமிழே...
ஹிந்தி திணிப்புக்கு
கருப்புக்கொடி
காட்டிய
செங்கொடியே...
இந்திய நாட்டின்
விடுதலைக்காகவும்
விடியலுக்காகவும்
போராடிய வீரமே
பத்தொன்பது வயதில்
சிறைபுகுந்து
இருநான்கு ஆண்டுகள்
சிறையிலிருந்த
தியாகமே...
தடை செய்த போது
தலைமறைவாகி
விடுதலையின் போது
விருட்சமாகிய எங்கள்
இயக்கத்தின் வேரே...
கதராடை போர்த்திய
செந்தழலே
உழைப்பாளிகளின்
சங்க நாதமே...
சட்டமன்றத்திலும்
மக்கள் மன்றத்திலும்
ஓங்கி ஒலித்திட்ட
உரிமையின் குரலே...
தொழிலாளி வர்க்கத்தின்
தோழமையே...
எங்களை வழிநடத்தும்
நேர்மையே...
மக்களின் அன்போடு
வாழ்க நீங்கள்
இன்னும் ஒரு
நூறாண்டு...
- கே.பாலபாரதி