tamilnadu

img

வேடசந்தூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிபதியிடம் கே.பாலபாரதி, மாதர் சங்கத் தலைவர்கள் புகார்

 திண்டுக்கல், பிப்.5 வேடசந்தூர் ரெங்கநாதபுரத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப் பட்ட சம்பவத்தில் உண்மைக் குற்றவாளி களை கைது செய்ய வலியுறுத்தி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் மகிளா நீதி மன்ற நீதிபதியிடம் புகார் மனு கொடுத்தனர்.  வேடசந்தூர் ரெங்கநாதபுரத்தில் மில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குடும் பத்தைச் சேர்ந்த ஆறு வயது பெண் குழந்தை விளையாடச் சென்ற போது பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட் டுள்ளது. அந்தக் குழந்தை டிராக்டரில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக முதல் தகவல் அறிக்கை பொய்யாக வெளியிடப் பட்டு உள்ளது. உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களைக் கைது செய்ய வேண்டும். இந்த வழக்குக்கு தொடர்பு இலலாத இரண்டு சிறுவர்கள் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் உண்மைக் குற்றவாளி யின் தோட்டத்தில் வேலை செய்யக்கூடிய வரின் மகன்கள். உண்மைக் குற்றாவாளி யாக கருதக்கூடிய உமாசேகர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்மென மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 சிறுமிகள் மரணம் 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலபாரதி, திண்டுக்கல் மாவட்டத்தில் 15 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள னர். இது போன்ற வழக்குகளில் ஆளுங்கட்சி யினர் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார் கள். போக்சோ சட்டத்தில் சிறுவர்களைக் கைது சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்து பிறகு வெளியில் கொண்டு வந்துவிடலாம் என்று கூறி காவல்துறையினர் மிக சாமர்த்தியமாக வழக்குப் பதிவு செய்கிறார்கள். உண் மைக் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். காவல் துறை தங்கள் முதுகுக்குப் பின்னால் பாது காக்கக் கூடாது. எங்களது புகாரைப் பெற்றுக்கொண்ட மகிளா நீதிமன்ற நீதிபதி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளார். மேலும் இந்தப் பிரச்சனை யை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பா ளரிடம் பேசுவதாக கூறியிருக்கிறார்கள். நாங்களும் காவல் கண்காணிப்பாளர் சக்தி வேலை சந்தித்துப் பேச உள்ளோம். மாவட்ட நீதிபதியிடமும் புகார் தெரிவிக்க உள்ளோம் என்றார். பேட்டியின் போது கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், நகர்க்குழு உறுப்பினர் கே.எஸ்.கணேசன். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ராணி, மாநிலக்குழு உறுப்பினர் வனஜா, வழக்கறிஞர் நந்தினி ஆகியோர் உடனிருந்தனர்.