சென்னை,ஜூலை 30- பேசும் போதும், எழுதும் போதும் பிறமொழிச் சொற்களின் கலப்பை தவிர்க்கவும், கலைச்சொற் களை தமிழ்படுத்தி பயன்படுத்தவும் சொற்குவை என்னும் வலைதளத்தை தமிழக அரசு அறி முகப்படுத்தியுள்ளது. சொற்களே மொழிக்கு அடிப்படை. தமிழ் சொற்களைப் பாதுகாத்தால்தான், தமிழ்மொழி யைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முடியும். சொற் கள் பெருகப் பெருக மொழியும் வளர்ந்து உயர்வு பெறும் என்ற அடிப்படையில், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் தனி அலுவ லகம் அமைக்கப்பட்டு sorkuvai.com எனும் இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. \
பிறமொழிச் சொற்களை நீக்கி தமிழ் சொற் களைப் பயன்படுத்தவும், பிறமொழியில் உள்ள கலைச் சொற்களை தமிழ் மொழியில் பயன் பாட்டுக்கு கொண்டு வரவும் இந்த திட்டம் நடை முறைக்கு வந்துள்ளது. ஆங்கிலத்தில் உள்ள ஒரு அரிய சொல்லுக்கு தமி ழில் என்ன பொருள், இலக்கியத்தில் என்ன பொருள் உள்ளது. மேலும் இந்த சொல் எப்படி உருவாகி யுள்ளது போன்ற சந்தேகத்தையும் கேட்டு தெளிவு பெற, 14469 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தி யுள்ளது. இதன் மூலம் தற்போது காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொது மக்கள், அறி ஞர்கள் மற்றும் மாணவர்கள் மொழி சார்ந்த தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மொழி சார்ந்த அறிஞர்களைக் கொண்டு தனித்தனியாக குழுக்கள் அமைத்து கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள், இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பிறமொழி வார்த்தைகளுக்கு சரியான சொற்களை கொடுத்தால் தங்களின் குழு அந்த சொற்களை பரி சீலனை செய்து அவற்றையும் இந்த அகராதியில் சேர்த்துக் கொள்வோம் என்கிறார் அகரமுதலியின் இயக்குநர் காமராசு. இந்த சொற்குவை திட்டத்தின் மூலமாக இது வரை 600-க்கும் மேற்பட்ட துறைகளில் 4 லட்சத்து 2 ஆயிரம் சொற்களை பதிவு செய்துள்ளனர். இன்னும் பல சொற்களை பதிவேற்றும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இச்சொற்குவைத் திட்டத்தை உலகெங்கும் உள்ள அறிஞர் பெருமக்களும், மொழி யியல் ஆய்வாளர்களும் பயன்படுத்துவதன் மூலம் ஐக்கிய நாடுகளின் (யுனெஸ்கோ) அமைப்பு வெளி யிட்டுள்ள மொழிவரிசைப் பட்டியலில் 14-ஆம் இடத்திலுள்ள தமிழ்மொழி 10-ஆம் இடத்திற்கு முன்னேற்றம் காண்பதற்கான வழிவகை அமையும் என்று கருதப்படுகிறது.