what-they-told

img

திருவாரூர் அரசு மருத்துவமனையில் 14 பேருக்கு டெங்கு

திருவாரூர்,அக்.6- காய்ச்சல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட 14 பேருக்கு டெங்கு காய்ச்சல்  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பல பகுதி களில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால்  பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள்  அளிக்கப்பட்டுவருகின்றன.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மருந்து களை உட்கொள்ள வேண்டாம்  என்றும் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச்  சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளு மாறும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 72 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு சிறுமிகள் உட்பட 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளதாக  மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி பிரிவில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரமற்ற நிலை உள்ளது. தேங்கிக்கிடக்கும் சாக்கடை மற்றும் குப்பைகளை அகற்ற தமிழக அரசு  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு மாவட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.