what-they-told

img

நாய்கள் உதவுமா?

கொரோனா தொற்று பரவியுள்ள வர்களை நாய்களின் மோப்பத் திறன் மூலம் கண்டறிய முடிம் என்ற யோசனையை பிரிட்டனைச் சேர்ந்த சில நிபுணர்கள் முன் வைத்துள்ளனர்.

நாய்களுக்கு ஒரு மணி நேரத்தில் 750 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப் பதை கண்டறியும் சக்தி இருப்பதாக நிபு ணர்கள் நம்புகின்றனர்.

பிரிட்டிஷ் தொண்டு நிறுவனத்தின் (மருத் துவ உதவி நாய்கள்) தலைமை நிர்வாக அதி காரி மற்றும் இணை நிறுவனருமான டாக்டர் கிளாரி “டெய்லி மிரர்க்கு” அளித்துள்ள பேட்டியில், “நாய்களால் கொரானோ வைர ஸைக் கண்டறிய முடியாது என்று நம்பு வதற்கு எந்தக் காரணமும் இல்லை. மனிதர் களின் நோயைக் கண்டறிவதில் நாய்கள் ஏற்கனவே பல அருமையான சாதனைகளை படைத்துள்ளன. நாய்களுக்கு கொரோனா தொற்றைக் கண்டறியவும் பயிற்சியளிக்க முடியும். “கொரோனாவை கண்டறிவதற் கான வளங்கள், சோதனை கருவிகள் குறை வாக இருக்கும்போது, நூற்றுக்கணக்கான வர்களை ஒரே நேரத்தில் சோதனை செய்ய முடியாது. ஆனால் நாய்கள் 750 பேரை மிக விரைவாகக் கண்டறியும். இதன் மூலம் சோதனை மற்றும் சுய-தனிமைப்படுத்த வேண்டியவர்களை அடையாளம் கண்டு நோய் பரவுதலை தடுக்க முடியும்” என்றார். 

கொரோனா போன்ற சுவாச நோய்கள் நம் உடல் நாற்றத்தை மாற்றுகின்றன என் பதை நாங்கள் அறிவோம். நாய்களால் அதைக் கண்டறிய அதிக வாய்ப்பு உள்ளது என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் நோயின் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவர் பேராசிரியர் ஜேம்ஸ் லோக னும், ஏஆர்சிடிஇசி இயக்குநரும் மார்ச் மாதத்தில் கூறியிருந்துள்னர். மலேரியா நோய்த்தொற்றுடன் மனிதர்களிடமிருந்து வரும் நாற்றங்களை நாய்கள் மிக அதிக துல்லியத்துடன் கண்டறிய முடியும் என்பதை தாங்கள் நிரூபித்துள்ளதாக அவர்கள் கூறு கின்றனர்.

நோய்த் தொற்றை நாய்கள் மூலம் கண்ட றியும் சோதனை ஆறு வாரங்களுக்குள் நடை பெறலாம் என்று பிபிசி தெரிவித்துள்ளது. அப்படி நடைபெற்றால் விரைவாக ஏராள மானோரைக் கண்டறியமுடியும் என டர்ஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீவ் லிண்ட்சே கூறுகிறார். மேலும் இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் விமான நிலை யங்களில் கொரோனா தொற்று அறிகுறி யுடன் வருபவர்களைக் கண்டறிய நாய் களைப் பயன்படுத்தலாம் என்றும் லிண்ட்சே கூறுகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று உள்ள வர்களை நாய்கள் கண்டறிந்தவுடன், அவர் கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டுள் ளார்களா என்பது பிற சோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்படும் என்கின்றனர் நிபு ணர்கள்.

பாக்ஸ் நியூஸ் இணையதளத்திலிருந்து...