முதலமைச்சருக்கு ஆட்டோ சம்மேளனம் கோரிக்கை
சென்னை, பிப். 4 - காவல்துறையின் அடக்குமுறையால் உயிரி ழந்த ஆட்டோ ஓட்டுநர் அரிச்சந்திரன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர் சம்மேளனம் வலியு றுத்தி உள்ளது. இது தொடர்பாக சம்மேள னத் தலைவர் வி.குமார், பொதுச் செயலாளர் எம். சிவாஜி ஆகியோர் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தின் சுருக்கம் வருமாறு: மதுரை ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் எல்.அரிச்சந்திரனை கடந்த 28ந் தேதி போலீசார் வாகன சோதனையின் போது கடுமையாக தாக்கி யுள்ளனர். இதில் மன உளைச் சலுக்கு உள்ளான அரிச்சந்தி ரன் அருகில் இருந்த மின்சார கம்பியை பிடித்ததால் உடல் கருகியது. அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த அவர், பிப்.2 அன்று மரண மடைந்தார்.
வாகன சோதனை என்ற பெயரில் கூடுதல் அபராதம், வாகன முடக்கம், வாகன பறிப்பு, ஆவணங்கள் பறிப்பு, அவமானப்படுத்துவது, திட்டுவது, அடிப்பது போன்ற நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபடுகின்றனர். மதுரையில் விதிகளை மீறும் ஆட்டோக்கள் அனைத் தும் காவல்துறையினருக்கு சொந்தமாக இருக்கி றது அல்லது காவல்துறை யினருக்கு மாதமாதம் கமிஷன் கொடுப்பவர்க ளுக்கு சொந்தமானதாக உள்ளது. இதனை மறைக்க நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகின்றனர். அதன் வெளிப்பாடாக எல்.அரிசந்தி ரன் மரணம் நிகழ்ந்துள்ளது. நீதிபதியிடம் அரிசந்தி ரன் கொடுத்த வாக்குமூலத்தில் காவல் துறையின் தொந்தரவால் தான் இந்த நிலைக்கு சென்ற தாக கூறியுள்ளார். அரிச் சந்திரனின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடிய ஆட்டோ தொழிலாளர்களை யும், அவரது சகோதரரையும் காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமாக அடித்து கைது செய்துள்ளனர். இரவு வீட்டிற்கு சென்று அரிச்சந்திரனின் உறவினர் களை மிரட்டி உடலை வாங்க வைத்துள்ளனர். எனவே, இப்பிரச்சனை யில் முதலமைச்சர் தலை யிட்டு, அரிச்சந்திரன் குடும் பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தின் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த மரணத் திற்கு காரணமான காவலர் காசிநாதன் உள்ளிட்ட அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத் தில் கூறப்பட்டுள்ளது.