what-they-told

img

கனமழையால் நாசமடைந்த பயிர்கள் அதிகரிக்கும் வெங்காயம் விலை

புதுதில்லி,செப்.22- கனமழையால் வெங்காயப் பயிர்கள் அதிகளவில் நாசமடைந்த தால் வெங்காய விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மகாராஷ் டிரம், கர்நாடகம், ஆந்திரா, குஜராத், கிழக்கு  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைவிடாமல் பெய்த கனமழை யால் வெங்காயப் பயிர்கள் நாச மடைந்தன. இதனால் வெங்கா யத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சந்தைகளில் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், சமீபகால மாக தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வெங்காயத்தின் மொத்த விலையும் சில்லறை விலையும் உயர்ந்து வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான மகாராஷ்டிரா மாநிலம் லசல்கோன் சந்தையில், கடந்த வார நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 45  ரூபாயாக உயர்ந்தது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை சென்னையில் 38 ரூபாயாகவும் கொல்கத்தாவில் 48 ரூபாயாகவும் மும்பையில் 56 ரூபாயாகாவும் தில்லியில் 57 ரூபாயாகவும் இருந்தது. வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வு தொடரும் என வேளாண் வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால், இன்னும் சில நாட்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நூறு ரூபாயை தாண்டும் என்பதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.  தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசின் ‘நாஃபெட்’ கூட்டுறவு அங்காடிகள் மூலம்  ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய் என்ற விலையில் அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் தொகுப்பில் இருந்த 56 ஆயிரம் டன் வெங்காயத்தில் 16 ஆயிரம் டன் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும்  மொத்த விற்பனையாளர்களிடம் உள்ள வெங்காயத்தின் அளவுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.