சென்னை,நவ.13- செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அர சாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டி ருக்கிறது. மேலும், புதிய தாலுகா விவரங்க ளையும், தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கி றது. சமீபத்தில் பிரித்து அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்கள் புதிய மாவட்டங்களாக உருவாக்கப்பட்ட தற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே 32 மாவட்டங்கள் இருந்த நிலையில் கடந்த ஜன வரி மாதம் புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவானது. இந்நிலையில் செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்படு வதாக தமிழக அரசு அறிவித்தது. காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும், என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதன்படி, 4 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதுகுறித்த அரசாணையை, பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் நிர்வாகத் துறை முதன்மைச் செய லர் ககன்திப் சிங் பேடி பிறப்பித்துள்ளார். இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி புரம், செங்கல்பட்டு என இரண்டாக பிரிக்கப் பட்டுள்ளது.
செங்கற்பட்டு
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தலைநகர் - காஞ்சிபுரம். இதில் காஞ்சிபுரம், திருப் பெரும்புதூர் ஆகிய இரண்டு வட்டங்களும், காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருப்பெரும் புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர்(புதியது) என ஐந்து வட்டங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தலைநகர் செங்கல்பட்டு. செங்கல்பட்டு, தாம்பரம், மது ராந்தகம் என மூன்று வருவாய் வட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர்(புதிது), மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் என 8 வட்டங்கள் உரு வாக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம் திருநெல் வேலி, தென்காசி என இரண்டு மாவட்டங்க ளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் திரு நெல்வேலி மாவட்டத்திற்கு திருநெல்வேலி தலைநகராகக் கொண்டு திருநெல்வேலி, சேரன்மாதேவி இரு வருவாய் வட்டங்களும், திருநெல்வேலி, சேரன்மாதேவி, மானூர், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, அம்பாசமுத்திரம் ஆகிய எட்டு வட்டங்களையும் உருவாக்கியுள்ளனர். தென்காசியை தலைநகராகக் கொண்ட புதிய மாவட்டத்தில் தென்காசி, சங்கரன் கோவில் இரண்டு வருவாய் வட்டங்களும் தென்காசி, சங்கரன்கோவில்,செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய 8 வட்டங் களையும் உள்ளடக்கியதாக அமைக்கப் பட்டுள்ளன.
திருப்பத்தூர்
வேலூர் மாவட்டம் வேலூர், திருப் பத்தூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங் களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி வேலூர் மாவட்டத்திற்கு தலைநகர் வேலூர். வேலூர், குடியாத்தம் இரண்டு வருவாய் கோட்டங் கள், வேலூர், குடியாத்தம், அணைக்கட்டு, காட்பாடி, பேரணம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய 6 வட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. புதிய மாவட்டமான திருப்பத்தூருக்கு தலைநகர் திருப்பத்தூராகும். திருப்பத்தூர், வாணியம்பாடி இரு வருவாய் கோட்டங் களையும் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்ராம்பள்ளி ஆகிய நான்கு வட்டங்களையும் உள்ளடக்கியதாக பிரித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ராணிப் பேட்டையை தலைநகராகவும் ராணிப் பேட்டை, அரக்கோணம் இரண்டு வருவாய் கோட்டங்களையும் வாலாஜா, அரக்கோ ணம், நெமிலி,ஆற்காடு ஆகிய நான்கு வட்டங் களையும் கொண்டதாக உருவாக்கப் பட்டுள்ளன. இதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், திண்டி வனம் என இரண்டு வருவாய் கோட்டங் களை உள்ளடக்கிய வகையிலும், கள்ளக் குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி, திருக் கோயிலூர் ஆகிய வருவாய் கோட்டங் களை உள்ளடக்கியதாகவும், ஏற்படுத்தப் பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் 9 தாலுகாக்களை கொண்டதாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டம் 6 தாலுகாக்களை கொண்டதாகவும் இருக்கும் என்றும், அரசாணையில் கூறப்பட்டுள்ளது. நவம்பர் 12 ஆம் தேதி முதல் இந்த அரசாணை அமலுக்கு வந்துள்ளது.