what-they-told

img

புதிய மாவட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை,நவ.19- தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங் களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான தேதி மற்றும் நேரம்  ஆகியவை இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற  22 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு தென்காசி மாவட்டத்தை யும், வரும் 27 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு கள்ளக்குறிச்சி  மாவட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். நவம்பர் 28 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ராணிப்  பேட்டை மாவட்டத்தையும், தொடர்ந்து 12.30 மணிக்கு திருப்  பத்தூர் மாவட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தை 29 ஆம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.