what-they-told

img

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வராக இன்று பதவியேற்பு

மும்பை,நவ.27-  நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க அச்ச மடைந்து ராஜினாமா செய்து ஓட்டம் பிடித்தார் பாஜக தேவேந்திர பட்னாவிஸ். இதனையடுத்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணியான மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணியின் சார்பில் முதலமைச்சர் பதவி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே புதன் கிழமையன்று  காலை, ஆளுநர் பகத்சிங் கோஷி யாரியை சந்தித்துப் பேசினார்.  மும்பை பெருநகரின் தாதர்  பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி பூங்காவில் வியாழன் மாலை 6.40 மணியளவில் நடைபெறும் விழாவில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகா ராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்கிறார்.   ஆளுநர் பகத்சிங்  கோஷியாரி, பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.  இதையொட்டி தாதர் சிவாஜி பூங்காவில் விழா ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. முன்னதாக புதன்கிழமையன்று காலை 8 மணியளவில் தற்காலிக சபாநாயகர் காளிதாஸ் கொலம்ப்கர் தலைமையில் நடைபெற்ற மகா ராஷ்டிரா சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 288 எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர்.