what-they-told

img

ராஜஸ்தானில் படையெடுக்கும் பாலைவன வெட்டுக் கிளிகள்

ஜெய்ப்பூர், ஜூன் 22- பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்குள் பாலைவன வெட்டுக் கிளிகள் படையெடுத்துள்ளதால் அவற்றை அழிக் கும் பணிகளை அம்மாநில அரசு தீவிரமாக செய்து வரு கிறது. பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்திற்குட்பட்ட அனுப்கர் நகருக்குள் புகுந்துள்ளன. ஐந்து சதுர கிலோ  மீட்டர் அடர்த்தியுள்ள இந்த வெட்டுக் கிளிகள் கூட்டம் அங்குள்ள பயிர்களை அழித்து வருகின்றன. அண்டை மாவட் டங்களான பிகானிர், ஜலோர், பார்மர், ஜெய்சால்மர் மாவட்டங் களில் வெட்டுக் கிளிகள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெட்டுக்கிளி களை விரட்ட உலக வங்கி நிதி உதவியுடன்411 டிராக்டர்க ளில் பவர் ஸ்ப்ரேயர் மூலம் மருந்து தெளிக்கவும், இதற்காக 53,000 லிட்டர் மருந்து கொள்முதல் செய்யவும் வேளாண் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.