கோவை, ஜூன் 5 - கோவை மாவட்டத்தில் படையெடுக்கும் பாலை வன வெட்டுக்கிளியால் எந்தவித பாதிப்பும் இல்லை. இதனால் விவசாயிகள் அச்சப்படத்தேவையில்லை என கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தற்போது வடமாநிலங்களில் பாலை வன வெட்டுக்கிளிகள் படையெடுத்து பல் வேறு பயிர்களை தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வரு கிறது.
வடமேற்கு மாநிலங்களில் தாக்கிய வெட்டுக் கிளிகள் போன்ற வெட்டுக்கிளிகள், தமிழகத்திலும் உள்ளதா என ஆய்வு செய்திட வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகளும், வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறை அலுவலர்களும், தமிழக எல்லை பகுதி யான ஊட்டி காந்தள் பகுதியில் ஆய்வு மேற் கொண்டு, இப்பகுதியில் காணப்படும் வெட்டுக் கிளிகள், பாலை வன வெட்டுக்கிளி வகையைச் சார்ந் தது அல்ல எனவும் உள்ளூர் வகை வெட்டுக்கிளிகள் எனவும் உறுதி செய்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்ற போதிலும், கண்காணிப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என வேளாண்துறை அலுவலர் களுக்கு தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட எல்லைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வெட்டுக்கிளி தாக்குதல் குறித்து தீவிரமாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மீறி, எதிர்பாராத சூழலில் பாலைவன வெட்டுக்கிளிகளின் ஊடுருவல் ஏற்படுமாயின், அதனை உடனடியாக எதிர்கொள்ளும் பொருட்டு பரிந்துரைக்கப்பட்ட உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயன மருந்துகள் தெளிப்பதற்குத் தேவையான உபகரணங்களை போதுமான அளவு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலைவன வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்பட்டால் சம் பந்தப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை ஆலோசித்து வயல்களில் டிரம் அல்லது டின்கள் கொண்டு ஒலி எழுப்புவதன் மூலம், தடுக்கலாம். அசாடிராக்டின் எனும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வேம்பு சார்ந்த தாவர பூச்சிக்கொல்லியினை பயன் படுத்தலாம். பாலைவன வெட்டுக்கிளிகள் பெருங் கூட்டமாக தென்பட்டால் மாலத்தியான் மருந் தினை உரிய மற்ற மருந்துகளுடன் கலந்து தெளிப் பான்கள் மற்றும் பெரிய டிராக்டர் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம். தற்போதும் வெட்டுக்கிளிகள் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் தென்பட்டதாக விவசாயி கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ள படி, இதுபோன்று 250 வகையான உள்ளூர் வெட்டுக்கிளிகள், தமிழ்நாட்டில் உள்ளன. இவற்றில் நன்மை செய்யக்கூடிய வெட்டுக்கிளிகளும் பல உள்ளன. எனவே, விவசாயிகள், கோவை மாவட்டத் தில் வயல்களில் காணப்படும் உள்ளூர் வெட்டுக் கிளிகளைக் கண்டு, பாலைவன வெட்டுக் கிளிகள் என அச்சப்பட வேண்டாம். இருப்பினும், வெட்டுக்கிளிகள் கூட்டமாக தென்பட்டால், விவ சாயிகள் தங்கள் அருகில் உள்ள வேளாண்மைத் துறை அல்லது தோட்டக்கலைத்துறை அல்லது வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் அறி வியல் மையத்திற்கு தகவல் தெரிவித்து ஆலோசனை பெறலாம் இவ்வாறு ஆட்சியர் கூறினார்.