உதகை, ஜன. 2- மந்தாடா கிராமத்தில் உள்ள மக்கள் பயன்படுத்தும் குடிநீர் சுரக்கும் சுணை புதர் மண்டி கிடப்பதால் சுகா தார சீர்கேடு ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூ ராட்சிக்குட்பட்டது மந்தாடா கிராமம். இங்கு 35 குடும்பங்களைச் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுணையிலிருந்து குழாய் பதித்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சுணையை சுற்றி தொட்டி அமைத்து இரும்பினால் ஆன மூடி கொண்டு மூடப்பட்டது. இந்த மூடி துருப்பிடித்து உடைந்துவிட்டநிலையில் இதனை சுற்றி புதர்கள் மண்டி காணப்படுகி றது. இதன் காரணமாக எலி, பறவை, பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் தொட்டிக்குள் விழுவதால் குடிநீரை பயன்படுத்த முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல் இந்த பகுதி யில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தேக்கதொட்டி கட்டப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இதன் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு மேற்பூச்சு பெயர்ந்து விழுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.