weather

img

புதிய  புயல்: மீனவர்கள் கரைதிரும்ப அறிவுறுத்தல்...

சென்னை:
தமிழகத்தில்  4 நாட்களுக்கு பெரும்பாலான இடங் களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை யொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வெள்ளிக்கிழமையன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமையன்று புயலாக மாறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிதாக உருவாகும் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் கடற்கரை பகுதிகளிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைதிரும்புமாறு கடலோர காவல்படை அறிவுறுத்தி யுள்ளது. சிவப்புக்கொடி காட்டியும் ஒலிபெருக்கி மூலமும் புயல் எச்சரிக்கை விடுத்து மீனவர்களுக்கு கடலோர காவல்படை அறி வுறுத்தியுள்ளது.  புதிதாக புயல் உருவாகுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

;