weather

img

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

சென்னை,நவம்பர்.06- நாளை தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
கடந்த வாரம் உருவான பெஞ்சால் புயலால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்கள் புயல் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை.
இந்நிலையில் தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் நாளை (டிசம்பர்.07) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் டிசம்பர் 11,12 தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.