weather

img

வங்கக்கடலில் டாணா புயல் உருவாகியுள்ளது!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் டாணா புயலாக உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு டாணா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கேபுபாராவுக்கு 630 கி.மீ. தூரத்திலும், ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்துக்கு 580 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது டாணா புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.