weather

img

தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும்: வானிலை மையம்....

சென்னை:
தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவக் காற்று காரணமாகத் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடதமிழகத்தல் வறண்ட வானிலையும் நிலவும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் குறிப் பிட்டுள்ளது.குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர் கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.