weather

img

தென் தமிழகத்தில் டிச. 2ல் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 2ஆம் தேதி தென் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மரக்காணம் அருகே கடந்த 25 ஆம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில், வரும் டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று காலை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதுமேலும் வலுப்பெற்று அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2ஆம் தேதி தென் தமிழக கடற்கரையை நெருங்கும். எனவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழக பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனால், தமிழகம் மற்றும் கேரளத்தில் அன்று அதிக கனமழை பெய்யக்கூடும் என்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது காற்றழுத்தத்தாழ்வு மண்டலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

;