வாட்ஸ் அப், பயனர்கள் Chat-ல் HD புகைப்படங்களை அனுப்பும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சமாகும்.
இதுவரை, வாட்ஸ்அப் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் மூலம் அனுப்பப்படும் புகைப்படங்களைச் சுருக்கிக் கொண்டிருந்தது, ஆனால் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், பயனர்கள் HD தரத்தில் புகைப்படங்களைப் பகிரும் விருப்பத்தைப் பெறுவார்கள்.
புகைப்படங்களைப் பகிரும்போது Standard/HD தரத்தை நாம் தேர்வு செய்து அனுப்ப முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். வாட்ஸ் அப்பை அப்டேட் செய்வதன்மூலம் இந்த அம்சத்தைப் பெற முடியும்.
தற்போது Beta version இல் மட்டும் இந்த அம்சம் செயல்படும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் அடுத்த சில வாரங்களில் இந்த அம்சம் உலகளவில் செயல்படும் என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
HD தரத்தில் புகைப்படத்தை அனுப்புவது எப்படி?
முதலில் கூகுள் ஃப்லே ஸ்டோரில் வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
பிறகு செயலியைத் திறந்து, விருப்பமான நபரின் Chat-க்கு சென்று Attachment-ஐ க்ளிக் செய்து விருப்பமான புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் புகைப்படம் பகிரும் திரையில், படத்தை எடிட்டிங், ரொடெட், க்ராப் உடன் HD button இருக்கும்.
புகைப்படத்தின் தரம் Standard தரம் அல்லது HD தரம் தேர்ந்தெடுக்கும் திரையைக் காண்பிக்கும்.