technology

img

ஓப்போ 75 இன்ச் ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம்  

சீனா : புதிய தொழில்நுட்ப தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வரும் ஓப்போ , தன்னுடைய 75 இன்ச் புதிய ஸ்மார்ட் டிவியை வருகிற செப்டம்பர் 26அன்று சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது .

இதற்கு முன்னதாக இந்நிறுவனம் , 'கே9 சீரிஸ்' மூலம் , 43 இன்ச் , 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்திருந்தது . தற்போது , அதே தொடரில்  , 75 இன்ச் அளவில் மிகப்பெரிய திரையுடன் புதிய ஸ்மார்ட் டிவியை  நாளை சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது . 

இந்த ஓப்போ 75 இன்ச் ஸ்மார்ட் டிவியில்  , ஃபுள் எச்டி ,  கலர் ஓ,எஸ் டிவி 2.0 , 1.06 பில்லியன் கலர்ஸ் , ப்ளூ லைட் ப்ரொட்டக்சன் ,மீடியா டெக் எம்டி 9652 , எச்டிஎம்ஐ , 3.5 எம் எம் ஜாக் , யூஎஸ்பி , எதர்நெட் போன்ற சிறப்பம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது .மேலும் , இதன் விலை குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை . 

;