technology

img

ஓப்போ 'கே 9 ப்ரோ 5ஜி' ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் 

சீனா : ஓப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஓப்போ 'கே 9 ப்ரோ 5ஜி' ஸ்மார்ட்போன் விரைவில் சீனாவில் அறிமுகமாகவுள்ளது .

ஓப்போ நிறுவனம் தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது . இந்நிலையில் , தற்போது தன்னுடைய கே சீரிஸ் -இல் , இந்த 'கே 9 ப்ரோ 5ஜி' ஸ்மார்ட்போனையும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது . முன்னதாக , கடந்த மாதம் 'ஏ 16'வெளியாகி வாடிக்கையாளர்களைக் கவர்ந்த நிலையில் , தற்போது அதைவிடச் சிறப்பம்சங்களைக் கொண்ட கே 9 ப்ரோ 5ஜி அறிமுகமாகவுள்ளது .

ஓப்போ கே 9 ப்ரோ 5ஜி-யின் சிறப்பம்சங்கள் :

* 6.43 இன்ச் அளவுள்ள ஃபுள் ஹெச்டி தொடுதிரை 

* மீடியா டெக் டைமென்சிட்டி 1200 ப்ராசசர் 

* எண்டிஎஸ்சி கலர் 

* இன்பில்ட் மெமரி 12 ஜிபி + அடிஸனல் மெமரி 256 ஜிபி 

* மெமரி கார்ட் வசதி 

* பின்பக்கம் 64 எம்பி கேமரா ஓசிஎஸ் (8 எம்பி + 2 எம்பி) , முன்பக்கம் 64 எம்பி செல்ஃபி கேமரா 

* 4500 எம்ஏஎச் அளவுள்ள பேட்டரி 

* ஆண்ட்ராய்ட் 11 (கலர் ஓ எஸ் 11.3)

* சி-டைப் , வை-பை 6 

மேலும் , ஆரம்ப விலையாக இந்திய மதிப்பில் ரூ.25,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் தேதி குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை .

 

 

;