technology

img

இந்தியாவில் கூகுளின் ‘BARD AI’ செயலி அறிமுகம்!

இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு செயலியான BARD AI அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் Chat GPT-க்கு போட்டியாக செயற்கை நுண்ணறிவு செயலியான BARD AI சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. முதலில், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்ட நிலையில், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை சரி செய்து இந்தியா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 40 மொழிகளில் கொண்டுவர உள்ளதாக கூகுள் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
 

;