technology

img

சாம்சங் ஃப்ரீஸ்டைல் அல்ட்ரா போர்டபிள் ப்ரொஜெக்டர் இந்தியாவில் அறிமுகம் 

சாம்சங் புதிய ஃப்ரீஸ்டைல் அல்ட்ரா போர்டபிள் ப்ரொஜெக்டர் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  

இந்தியாவில் சாம்சங் இன்று அதன் புதிய ஸ்மார்ட் ஃப்ரீஸ்டைல் அல்ட்ரா போர்டபிள் ப்ரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. மக்களுக்கு சாத்தியமான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குவதே இந்த ஸ்மார்ட் ப்ரொஜெக்டரின் நோக்கம் என சாம்சங் தெரிவித்துள்ளது. இந்த போர்டபிள் ப்ரொஜெக்டர் 180 டிகிரி சுழலும் என்பதால், எங்கு வேண்டுமானாலும், எந்த கோணத்திலும் வேண்டுமானாலும் பொருத்தலாம் எனவும், எந்த நேரத்திலும் ஒரு பெரிய திரையைப் பயனர்கள் அனுபவிக்க இந்த ப்ரொஜெக்டர் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த சாம்சங்  ஃப்ரீஸ்டைல் அல்ட்ரா போர்டபிள் ப்ரொஜெக்டரின் உதவியுடன் 100 இன்ச் வரை திரை அளவில் வீடியோக்களை திட்டமிட முடியும். 30 இன்ச் முதல் 100 இன்ச் வரை திரையை மாற்றி அமைக்கக்கூடிய அம்சம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. எச்டிஆர் 10 ஆதரவுடன் 1920x1080 பிக்சல்கள் கொண்ட தெளிவான படத்தை இது வெளிப்படுத்துகிறது. இது வெறும் 800 கிராம் எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 16:9 விகித திரையை பிரதிபலிக்கிறது. இதில் இருக்கும் ஆட்டோ கீஸ்டோன் அம்சமானது சாய்வாக இருக்கும் படங்களை, தானாக சரிசெய்கிறது. ஆட்டோ ஃபோகஸ் இருப்பதால், தெளிவான திரையை இது பிரதிபலிக்கிறது. 360 டிகிரி ஒலியை வெளிப்படுத்தும் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளது என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அறிமுக விலை ரூ.84,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.