technology

img

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்ட்  2 பாக்மேன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒன்பிளஸ்  நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் நார்ட்  2 பாக் மேன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

’5ஜி ’ தொழிநுட்பத் தரத்தில் வெளியான ஒன்பிளஸ் நார்ட் 2-வின் அம்சங்களை மேம்படுத்தி இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த ஒன்பிளஸ் நார்ட்  2 பாக்மேன்' ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை, மீடியா டெக் டைம்சிட்டி 1200,  பின்பக்கம் 50எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 5 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 32 எம்பி அளவை கொண்டிருக்கிறது. 4500 மேகாவாட்  பேட்டரி வசதி, ஆன்டிராய்டு 11 ஒஎஸ், டைப்-சி போர்ட், போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. 

மேலும், மூன்று தர நினைவகங்களாக, உள்ளக நினைவகம்  12 ஜிபி , கூடுதல் நினைவகம் 256 ஜிபி(ரூ.37,999) , 8ஜிபி + 128ஜிபி திறன் (ரூ.27,999), 6ஜிபி+64ஜிபி(ரூ.24,999) ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. 

இதன் ஆரம்ப விற்பனை விலையாக ரூ.24,999-லிருந்து 37,999 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.