நியூயார்க்
தற்போதைய நவீன உலகில் டிஜிட்டல் கரன்சியின் பயன்பாடு மிக முக்கியமானதாகும். இந்த டிஜிட்டல் கரன்சியில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் ஆர்வத்துடன் அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கி நகர்ந்து வருகின்றன.
கிரிப்டோகரன்சி, பிளாக்செயின், என்எப்டி (NFT) வாயிலாக மாறுவதை உணர்ந்த பிரிட்டன் அரசாங்கம் ஒருபடி மேலே சென்று அந்நாட்டு நாணயங்களை அச்சிடும் ராயல் மின்ட் அமைப்பைக் கோடைக் காலத்திற்குள் என்எப்டி அமைப்புகளை உருவாக்கி பயன்பாட்டிற்குக் கொண்டு வர பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சுனக் உத்தரவிட்டார்.
உலகம் முழுவதும் டிஜிட்டல் கரன்சி பிரிவு பிசியாக உள்ள நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமும் டிஜிட்டல் கரன்சியில் களமிறங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா சில வருடங்களுக்கு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் வரையிலான குளோபல் கிரிப்டோகரன்சி திட்டத்தைக் கையில் எடுத்து முதலில் லிப்ரா (Libra) என்ற பெயருடன் கிரிப்டோகரன்சி உருவாக்கும் பணியைத் துவங்கியது. நிர்வாகம் மற்றும் முதலீட்டாளர்கள் பிரச்சனையால் அதை டியம் (DIEM) என்று பெயர் மாற்றியது. ஆனால் உலகின் பல முன்னணி நிதியியல் கட்டுப்பாட்டு ஆணையங்கள் தடை விதித்த காரணத்தால் இத்திட்டத்தை மொத்தமாகக் கைவிட்டது.
இந்நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க் தற்போது டிஜிட்டல் டோக்கன்களை உருவாக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். இந்த டோக்கன்கள் வீடியோ கேம்களில் பயன்படுத்தும் ஒன்று. Fortnite, Roblox போன்ற பிரபலமான கேம்களில் இதுபோன்ற டிஜிட்டல் டோக்கன்களைப் பயன்படுத்துவது வழக்கம்.
இதைத் தற்போது மெட்டா நிறுவனம் தனது தளத்தில் இருக்கும் கிரியேட்டர்கள் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் ஈர்ப்பது பொறுத்து பரிசாக வழங்கப்பட முடிவு செய்துள்ளது. இதற்காக "Zuck Bucks" பெயரில் டிஜிட்டல் பணத்தை டிஜிட்டல் டோக்கன்-களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்.