டிசம்பர் 28 ஆம் தேதி சீனாவில் ஸியோமி 12 வரிசை ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகிறது.
தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் ஸியோமி நிறுவனம் தன்னுடைய '5ஜி' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக புதிய தயாரிப்புகளான ஸியோமி 12 , ஸியோமி 12எக்ஸ் , ஸியோமி 12 ப்ரோ மற்றும் ஸியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை வருகிற டிசம்பர் 28 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்துகிறது.
இந்த ஸியோமி 12எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் 6.33 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை, 870 ஜி பிராசசர் ஸ்னாப் டிராகன், அமொல்ட் திரை, 8ஜிபி உள்ளக நினைவகம், 256 ஜிபி கூடுதல் நினைவகம், பின்பக்கம் 50 எம்பி கேமரா ஓசிஎஸ் (5எம்பி+2எம்பி ), முன்பக்கம் 20 எம்பி செல்பி கேமராவும், 5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி வசதியையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சீனாவில் அறிமுகமான பின் அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.