technology

img

இந்தியாவில் ஏஎம்டி ரேடியான் ஆர்எக்ஸ் 6800 ஜி.பி.யு விலை வெளியீடு

இந்தியாவில் ஏஎம்டி ரேடியான் ஆர்எக்ஸ் 6800 எக்ஸ்டி ஜி.பீ.யூ விலை ரூ.64,990 பிளஸ் ஜி.எஸ்.டி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஒரு வாரத்திற்கு முன்பு எக்ஸ்.டி அல்லாத மாடலுக்கான விலையை நிறுவனம் செய்துள்ளது.இந்த நிலையில்,  இந்தியாவில் ஏஎம்டி ரேடியான் ஆர்எக்ஸ் 6800 எக்ஸ்டி விலை தெரிய வந்துள்ளது.

ஏஎம்டி ரேடியான் ஆர்எக்ஸ் 6800 எக்ஸ்டி கிராபிக்ஸ் கார்டுக்கு ஜிஎஸ்டிக்கு முன்பு இந்தியாவில் 64,990 (செப்டம்பரில்) அறிவித்தது. தற்போது, ஏஎம்டி தனது ரேடியான் ஆர்எக்ஸ் 6000 பிரிவில், ஏஎம்டி ரேடியான் ஆர்எக்ஸ் 6800, ஏஎம்டி ரேடியான் ஆர்எக்ஸ் 6800 எக்ஸ்டி மற்றும் ஏஎம்டி ரேடியான் ஆர்எக்ஸ் 6900 எக்ஸ்டி உள்ளிட்ட மூன்று புதிய கிராபிக்ஸ் கார்டுகளை கடந்த மாதம் விலையை வெளியிட்டிருந்தது. AMD ரேடியான் RX 6800 XT அதிகாரப்பூர்வமாக AMD இந்தியா ஸ்டோர் அல்லது பிற மின்-சில்லறை விற்பனையாளர்களில் கிடைக்கவில்லை.

ஏஎம்டி ரேடியான் ஆர்எக்ஸ் 6800 எக்ஸ்டி விலை ரூ.64,990 என செப்டம்பர் மாத தெரிவித்தது. இதற்கு ஜிஎஸ்டி தனியாக சேரும். கிராபிக்ஸ் கார்டுகளில் குறைந்த விலையில் அதிக திறன் கொண்டுள்ளது எக்ஸ்டி பிரிவு தான். இது இணையதளங்களில் நேரடியாக பண பரிவர்த்தனை மூலம் மட்டுமே கிடைத்து வருகிறது. தற்போது, அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேதாந்த் கம்ப்யூட்டர் சபையர் ரேடியான் ஆர்எக்ஸ் 6800 16 ஜிபி ஜிபியு ரூ.65,000 ஆகவும், பிரைம் ஏபிஜிபி பட்டியலில் ரூ. 55,999 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மூன்று ஏஎம்டி ரேடியான் ஆர்எக்ஸ் 6000 ஜிபியுக்கள் அக்டோபரில் விற்பனைக்கு வந்தது. மேலும் ஏ.எம்.டி ரேடியான் ஆர்.எக்ஸ் 6800 க்கான அமெரிக்காவின் விலை 579 டாலர் (சுமார் ரூ. 43,000). ஏஎம்டி ரேடியான் ஆர்எக்ஸ் 6800 எக்ஸ்டி விலை 649 டாலர் (சுமார் ரூ. 48,000) மற்றும் ஏஎம்டி ரேடியான் ஆர்எக்ஸ் 6900 எக்ஸ்டி விலை 999 டாலர் (சுமார் ரூ. 74,000). அவை ஆர்.டி.என்.ஏ 2 விளையாட்டு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ்/எக்ஸ் ஆகியவற்றை இயக்கும். இந்த ஜி.பி.யுக்கள் என்வீடியாவின் ஜியிபோர்ஸ் ஆர்.டி.எக்ஸ் 3070, ஜியிபோர்ஸ் ஆர்.டி.எக்ஸ் 3080 மற்றும் ஜியிபோர்ஸ் ஆர்.டி.எக்ஸ் 3090 ஆகியவற்றுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்துள்ளது.
 

;