tamilnadu

பரனூர் சுங்கச் சாவடியை மீண்டும் திறக்க எதிர்ப்பு

செங்கல்பட்டு, ஜன.29- செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு பேருந்திற்கு சுங்கவரி கேட்டனர். அப்போது, சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்து ஓட்டுநரை தரக்குறைவாகப் பேசிய தாக கூறப்படுகிறது. இதனால் பேருந்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக் கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஓட்டுனர் பசும்பொன் முடியரசு படுகாய மடைந்தார். அப்போது நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த  பொதுமக்கள் ஆத்திரம் அடைந்த சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா காவலர்கள் வழக்குப் பதிவு செய்து சுங்கச்சாவடி ஊழியர்  கள் 3 பேர் மற்றும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகி 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் திறக்க எதிர்ப்பு சுங்கச்சாவடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கியபோது, கணினி உள்ளிட்ட இதர உபகரணங்கள் சேதமானது. இதனால் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங் கள் கட்டணங்கள் இன்றி சென்று வந்தன.  இதனைத் தொடர்ந்து  சுங்கச்சாவடியைச் சீரமைத்து மீண்டும் இயக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் தாக்குதல் நடைபெற்ற போது சுங்கச்சவாடியில் வைத்திருந்த ரூ. 18 லட்சம்  காணாமல் போயிருப்பதாக சுங்கச் சாவடி நிர்வாகத்தின் சார்பில் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்தும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடை பெற்றுவருகின்றது.  கடந்த 2005ஆ ம் ஆண்டு பரனூர் முதல் திண்டிவனம் ஆத்தூர் வரையிலான 4 வழிச் சாலை அமைக்க ரூ.536 கோடி ரூபாய் மட்டுமே செலவானது. ஆனால் 13 வருடங்களில் சுமார் 2 ஆயிரம் கோடிக்கு மேல் பரனூர் சுங்கச் சாவடியில் வசூல் நடந்துள்ளதாகக் கூறப்படு கிறது.  நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் வாகனங்க ளுக்கு மேல் கடந்து செல்லும் பரனூர் சுங்கச்சாவடியில் தொடர்ந்து சுங்க வசூல் நடைபெற்று வருவதில் குளறுபடிகள் இருப்பதாலும் தொடர்ந்து வாகன ஓட்டி களை மன உலைச்சலுக்கு ஆளாகி வருகின்ற னர்.  எனவே சுங்கச் சாவடியை மூட வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் கூறிய தாவது:- சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கிய தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். சாலை அமைத்தற்கு செலவான தொகையைக் காட்டிலும் பல மடங்கு வசூல் செய்த பின்னரும், தொடர்ந்து பொதுமக்களிடம் வசூல் செய்வது கண்டனத்திற்குரியது. வடமாநில இளை ஞர்களை பணியில் அமர்த்துவதே இதுபோன்ற தாக்குதல் சம்பவத்திற்கு அடித்தளமாக அமைகின்றது. பரனூர் சுங்கச்சாவடியில் சாலை அமைத்த தொகைக்கு மேலாகவே வரி வசூல் செய்துவருவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதாகத் தெரிகின்றது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரையிலும் இந்த சுங்கச்சாவடி செயல்பட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்  கூறினார்.

;