tamilnadu

img

இனி தேசியக்கொடி மட்டும்தான்... ஸ்ரீநகர் தலைமைச் செயலகத்தில் காஷ்மீர் கொடி அகற்றம்!

ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அத்துடன் மாநில அந்தஸ்தைப் பறித்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றியது.தற்போது, ஸ்ரீநகர் தலைமை செயலகக் கட்டடத்தில் பறந்து கொண்டிருந்த காஷ்மீர் மாநிலக் கொடியையும் மத்திய அரசு அகற்றியுள்ளது. சிறப்பு உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்ட பிறகு, காஷ்மீர் மக்கள் தனிக்கொடி பயன்படுத்த முடியாது என்ற அடிப்படையில், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில், இந்திய அரசு அம்மாநில மக்களுக்கு அளித்த உரிமைகளில் தனிக்கொடி பயன்படுத்திக் கொள்ளும் உரிமையும் ஒன்றாகும். 1952-ஆம் ஆண்டு, தில்லியில் பிரதமர் ஜவஹர்லால் நேரு - காஷ்மீர்தலைவர் ஷேக் அப்துல்லா முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது முதல், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இந்தியத் தேசியக்கொடியுடன், காஷ்மீருக்கான கொடியும் பயன்படுத்தப் பட்டு வந்தது. அதைத்தான் தற்போது மத்திய அரசு அகற்றியுள்ளது.

;