tamilnadu

img

காஷ்மீர் மக்களை அச்சுறுத்துகிறதா மோடி அரசு?

ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்ற பெயரில், கடந்த வாரம், அங்கு 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், மேலும் 28 ஆயிரம் பாதுகாப்புப் படை வீரர்களும் காஷ்மீர் மாநிலத்துக்கு விரைவதாக, வெள்ளியன்று செய்திகள் வெளியாகின. மத்திய உள்துறை இதனை மறுத்து விட்டது.

ஆனால், காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால், அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள் விரைந்து வெளியேறுமாறு, காஷ்மீர் மாநில அரசு, வெள்ளிக்கிழமையன்று அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
இந்த உத்தரவு வெளியாகிக் கொண்டிருக்கும்போதே, அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் பாகிஸ் தானில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நிலக்கண்ணி வெடி மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக, இந்திய ராணுவம் செய்தி ஒன்றை வெளியிட்டது. அத்துடன், கண்ணிவெடி புகைப்படத்தை வெளியிட்டு, அதில் பாகிஸ்தான் ராணுவத் தொழிற்சாலை குறியீடு இருப்பதையும் சுட்டிக்காட்டியது. இதை எந்தவகையிலும் சகித்துக் கொள்ள மாட் டோம் என்று ஒரு எச்சரிக்கையை செய்தது.

அதைத் தொடர்ந்தே, ஸ்ரீநகருக்கு செல்லும் விமான டிக்கெட்டுக்களை ரத்துசெய்வது அல்லது மாற்றியமைப்பதற்கான கட்டணத்தை ‘ஏர் இந்தியா’, ‘இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாராஉள்ளிட்ட நிறுவனங்கள் தள்ளுபடி செய்தன. தேவைப்பட்டால் ஸ்ரீநகரிலிருந்து கூடுதல் விமானங்களை இயக்கதயாராக இருக்குமாறு விமான நிறுவனங்களை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கேட்டுக் கொண்டது.அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் இந்த சம்பவங்கள், காஷ்மீர் மக்களிடையே ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், அவர்கள் முன்னெச்சரிக்கையாக, அத்தியாவசியப் பொருட் களை வாங்கி இருப்பு வைப்பதற்கு, மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஏடிஎம் மையங்களில் அலைமோதுகின்றனர். மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் மக்கள் பெட்ரோல், டீசலை வாங்கபெரிய பெரிய கேன்களை கொண்டு செல்கின்றனர். இதே நிலைதான் ஏடிஎம் வாசல்களிலும் காணப்படுகிறது. அதிகமான கூட்டத்தால், ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாத நிலையும், பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இன்றைய சூழலில் ஏற்படுத்தப்பட்டு வரும் குழப்பத்திற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் மெகபூபாமுப்தி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ய முயற்சி நடைபெறுவதைப் போன்று தோன்றுவதாக சந்தேகம் தெரிவித்துள்ளார்.“2 நாடுகள் கொள்கையை நிராகரித்த முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட ஒரே மாநிலம் ஜம்மு - காஷ்மீர்.கடுமையான சூழலிலும் கூட, ஜன
நாயக மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவுடனேயே, காஷ்மீர் இணைந்துள்ளது. அதன் தனிப்பட்ட அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.“காஷ்மீரில் தற்போது நிலவி வரும்சூழல் குறித்து அறிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம். இதுதொடர்பாக ஆளுநரை சந்தித்து பேசினோம். ‘தீவிரவாத தாக்குதல் இருப்பதால் சிலமுன்னெச்சரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மற்றபடி அறிவிப்புஏதும் செய்யப்படவில்லை. சட்டங்களைமாற்றும் திட்டமும் இல்லை’ என தெரிவித்தார். ஆனால் என்ன நடக்கிறது என்றஉண்மையான தகவலை யாரும் சொல்லமறுக்கிறார்கள்” என்று தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.இதே குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் வைத்துள்ளார். மாநிலத்தில் மக்களுக்குபாதுகாப்பற்ற மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான சூழல் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

காஷ்மீரை மூன்றாகப் பிரிக்க மோடி அரசு திட்டம்?
ஜம்மு - காஷ்மீரில்  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்படுவது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது. அம்மாநிலத்துக்கு வழங்கப் பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் திட்டம் எதையும் மோடி அரசு வைத்திருக்கலாம் என்று காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சந்தேகம் கிளப்பி வந்தனர்.இந்நிலையில், காஷ்மீரை மூன்றாகபிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க, மோடி அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பை சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி வெளியிடுவார் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

;