சண்டிகர்
ஹரியானா சட்டமன்ற கூடுவதற்கு 2 நாட்கள் உள்ள நிலையில் சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் சபாநாயகர் கியான் சந்த் குப்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
ஹரியானா சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தா திங்களன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் அனில் விஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
சட்டமன்ற சபாநாயகர் மற்றும் இரண்டு எம்.எல்.ஏக்கள் கொரோனா கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சரான அனில் விஜ் பி.டி.ஐ தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் சபாநாயகர் கியான் சந்த் குப்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
இதனால், சபையின் நடவடிக்கைகளுக்கு துணை சபாநாயகர் ரன்பீர் கங்வா தலைமை வகிப்பார்.
சபாநாயகர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உட்பட ஹரியானா சட்டமன்றத்தின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களை கொரோனா சோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டது. தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே சட்டமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
அமர்வு தொடங்குவதற்கு 2 நாட்கள் உள்ள நிலையில் கொரோனா சோதனைக்கான சான்றிதழ், தொற்று இல்லாததிற்கான சான்றிதழ் இருந்தால் தான் அதிகாரிகள் உட்பட சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைய வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.