tamilnadu

img

வேலூர் நாடாளுமன்றத்தேர்தல் - திமுக வெற்றி

வேலூரில் நாடாளுமன்றத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றியடைந்துள்ளார். 
வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.  
இன்று காலை 8 மணிக்கு ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து வாக்குஎண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485340 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் 477199 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார். இருவருக்கிடையிலான வாக்கு வித்தியாசம்  8141 என்பது குறிப்பிடத்தக்கது. 
இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கதிர் ஆனந்த் பெற்றுக்கொண்டார்.