பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் குடும்ப வருமானச் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வேலூர், ஜூன் 16- மத்திய அரசின் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற பொருளா தாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான குடும்ப வருமானம், சொத்துச் சான்று பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள பொதுப்பிரிவினர் முன்னு ரிமை அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் மூலம் பயன்பெறும் வகையில், 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஏற்கெனவே இட ஒதுக்கீட்டால் கவரப்படும் பிரிவினர்களான பட்டியலினத்தவர், பட்டியல் இன பழங்குடியினர், சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் ஆகி யோர் அல்லாத பொதுப் பிரிவில் இடம்பெற்றுள்ள வர்களில், பொருளா தாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மத்திய அரசின் கல்வி நிறுவனங்க ளில் சேருவதற்கும், மத்திய அரசுப் பணிகளைப் பெற 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக வும், தற்போது நடைமுறை யில் உள்ள இட ஒதுக்கீட்டால் கவரப்படும் பிரி வினர்கள் அல்லாத, பொரு ளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினராகவும் இருக்க வேண்டும். தவிர 5 ஏக்கர் அல்லது அதற்கும் அதிகமாக விவசாய நிலம் உடையவர்கள், 1,000 சதுரஅடி, அதற்கு அதிக மாக சொந்த வீடு உடைய வர்கள், நகராட்சிப் பகுதி களில் 900 சதுரஅடி, அதற்கும் அதிகமான வீட்டுமனை உடையவர்கள், நகராட்சி அல்லாத பகுதிகளில் 1,800 சதுரஅடி வீட்டுமனை உடையவர்கள் பொருளா தாரத்தில் பின்தங்கியவர்க ளாக கருதப்படுவர். அந்த வகையில், பொரு ளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான குடும்ப வருமானம், சொத்துச் சான்று அந்தந்த வட்டாட்சியரால் வரையறுக்கப்பட்ட படிவத்தில் வழங்கப்படும். மனுதாரர் சுயஒப்பமிட்ட உறுதிமொழி பத்திரத்தை வரையறுக்கப்பட்ட படி வத்தில் அங்கீகரிக்கப்பட்ட சான்று உறுதி வழங்கும் வழக்குரைஞரின் ஒப்பம் பெற்று விண்ணப்பித்து, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான குடும்ப வருமானம், சொத்துச் சான்றை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் பலி
சிதம்பரம், ஜூன் 16- கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகேயுள்ள சின்னூர் மீனவ கிராமத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மீனவர்கள் படகில் மீன்பிடிக்க பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதிக்கு சென்றனர். அப்போது அன்னங்கோவில் என்ற இடத்தில் அலையின் சீற்றம் அதிமாக இருந்ததால் படகு தலைகுப்புற கவிழ்ந்தது. மீனவர்கள் கடலில் நீந்திக் கொண்டு கரைக்கு வந்தனர். அதில் நரசிம்மன் (26) என்ற மீனவர் மட்டும் கரைக்கு வரவில்லை. அவரை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் ஞாயிறு மாலை 3 மணியளவில் சாமியார்பேட்டை கடற்கரையில் அவரது உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
மணல் கடத்தலை தடுத்த 3 காவலர்களை கொல்ல முயற்சி
வேலூர், ஜூன் 16- வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த வன்னியவேடு பாலாறு படுக்கையில் மணல் கடத்தலை தடுத்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வன்னியவேடு பாலாறு படுக்கையில் மணல் கடத்துவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கர், தலைமைக் காவலர் நேதாஜி மற்றும் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் லாரி ஓட்டுனர் வேகமாக லாரியை ஓட்டி காவல்துறையினர் மீது கொலை வெறியுடன் மோத முற்பட்டுள்ளார். அதிலிருந்த தப்பிய காவல் துறையினர் லாரியை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். அதில் தகரகுப்பத்தை சேர்ந்த ஓட்டுனர் விக்கி (எ) விக்னேஷ் (23), திவாகர் (24) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.