tamilnadu

ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு

சென்னை,ஆக.26- தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வழக்கு  தொடர்பாக,  வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள்  நடத்திய போராட்டத்தில்  15 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.  இதன்பின்னரே ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்து மூடியது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி  வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

;